Tuesday, 2 January 2018

சுங்கை ராசா, பத்து தீகா டோல்கள் இனி கிடையாது


ஷா ஆலம்-
2018ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிமுதல் சுங்கை ராசா, பத்து தீகா ஆகிய டோல் கட்டண சாவடிகள் அதிகாரப்பூர்மான மூடுவிழா கண்டன.

15 நவம்பர் 1993 தொடக்கம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிளஸ் நிறுவனத்துடன் செய்துக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி செயல்பட்டு வந்தது.

பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தாக்கல் செய்த 2018 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போல் இவ்விரு டோல் சாவடிகளும்  மூடப்பட்டன.
இதன் அதிகாரப்பூர்வ மூடுவிழாவில் பிளஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ அஸ்மான் இஸ்மாயில் டோல் சாவடி அதிகாரப்பூர்வமாக
ரத்து செய்ததற்கான கடிதத்தை வழங்கினார்.

இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில தேமு தலைவர் டான்ஶ்ரீ நோ ஓமார், பொதுப்பணி துணை அமைச்சர் டத்தோ ரொஸ்னா அப்துல் ரஷிட் ஷிரின், மலேசிய நெடுஞ்சாலை வாரிய தல்லைமை இயக்குனர் டத்தோ இஸ்மாயில் முகமட் சாலே ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விரு டோல் சாவடிகளும் மூடப்பட்டதால் ஷா ஆலம், கிள்ளான் ஆகிய பகுதியிலுள்ள 270,000 மக்கள் மாதந்தோறும் வெ. 48.40 முதல் வெ.126 வரை மிச்சப்படுத்த முடியும்.

No comments:

Post a Comment