Tuesday, 30 January 2018
"ஒருதலைபட்ச மதமாற்றம் செல்லாது" - 9 ஆண்டுகால போராட்டத்தில் திருமதி இந்திரா காந்திக்கு வெற்றி
புத்ராஜெயா-
தனது மூன்று பிள்ளைகளை ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்தது செல்லாதது என அறிவிக்கக் கோரி கடந்த 9 ஆண்டுகளாக போராட்டம் நடத்திய திருமதி இந்திரா காந்தியின் வழக்கில் வெற்றி நிலைநாட்டப்பட்டது.
தனது முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லா தனது அனுமதியின்றி 3 பிள்ளைகளை மதமாற்றம் செய்தது செல்லத்தக்கது அல்ல என அறிவிக்கக் கோரி திருமதி இந்திரா காந்தி சட்டப் போராட்டம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் கூட்டரசு நீதிமன்றத்தில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்தது செல்லத்தக்கது அல்ல எனவும் மூன்று பிள்ளைகளின் மதமாற்றம் உடனடியாக நிராகரிக்கப்படுவதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
தாய், தந்தை ஆகிய இருவரின் சம்மதத்தோடு மட்டுமே 18 வயதுக்கு மேற்போகாத பிள்ளைகளை மதமாற்றம் செய்ய முடியும் என்ற ஒருதலைபட்சமாக செய்யப்பட்ட மதமாற்றம் செல்லத்தக்கது அல்ல.
கூட்டரசு அரசியலமைப்பு சட்டவிதி 12(4)இன் படி "parent" என குறிப்பிடப்பட்டுள்ளது தாய், தந்தை ஆகிய இருவரையும் உள்ளடக்கியதாகும். என கூறிய நீதிமன்றம், திருமதி இந்திரா காந்தியின் போரட்டத்திற்கு ஒரு தீர்வை அளித்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு தனது மூன்று பிள்ளைகளையும் ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்த முகமட் ரிடுவான், 9 மாத குழந்தையாக இருந்த பிரசன்னா டிக்ஷாவை தூக்கிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment