வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் 41ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த 7 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் ஓர் ஆடவர் உயிரிழந்ததோடு 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
நேற்று நிகழ்ந்த இச்சம்பவத்தில் தாமான் ஸ்கூடாயைச் சேர்ந்த ஹாஷிக் அர்ஷாத் என்பவர் உயிரிழந்தார். மேலும் 3 வயது சிறுமி உட்பட 7 பேர் காயமடைந்தனர்.
போலீசார் மோற்கொண்ட சோதனை நடவடிக்கையில் கொள்கலன் லோரி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் சோதனைக்காக நின்று கொண்டிருந்த வாகனத்தை மோதியது.
இச்சம்பவத்தில் கொள்கலன் லோரி, டேங்கர் லோரி, சிறிய லோரி, மூன்று கார்கள், ஒரு வேன் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
இதில் காயமடைந்தவர்கல் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் சாலை போக்குவரத்துச் சட்டம் 41 (1) ஆவது பிரிவின் கீழா கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது தொடர்பில் விசாரிக்கப்படுவதாகவும் மாவட்ட போலீஸ் தலைவர் ஷூல்கைய்ரி மொக்தார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment