Saturday, 27 January 2018

மருத்துவமனையில் தீ; 41 பேர் பலி


சியோல்-
தென் கொரியாவில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 41 பேர் மரணமடைந்துள்ளனர், 70 பேர் படுகாயம் அடைந்துளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7.30 மணியளவில் மருத்துவமனையின் முதலாவது மாடியிலுள்ள அவசர சிகிச்சை பிரிவில் தீவிபத்து ஏற்பட்டது என  மிர்யாங் தீயணைப்பு இலாகா தலைவர் சொய் மான் - வூ தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் 31 பேர் மரணமுற்றனர். 69 பேர் காயமடைந்தனர். முதலாவது, இரண்டாவது மாடியில் அதிகமானோர் இறந்து கிடந்ததாக அவர் சொன்னார்.

இதனிடையே, தென் கொரியா அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 41 பேர் மரணமடைந்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகள் உடனடியாக வழங்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் மூன் ஜியா இன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment