Tuesday, 23 January 2018

குண்டு வெடிப்பு; 3 பேர் பலி- 22 பேர் காயம்


யாலா-
தாய்லாந்து, யாலா நகரின் மார்க்கெட் வளாகத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலியானதோடு 22 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொது மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் புத்தர்கள், முஸ்லீம்கல் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.

தாய்லாந்து - மலேசியா எல்லையை ஒட்டியுள்ள மூன்று மகாணங்களீல் முஸ்லீம்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த மகாணங்களுக்கு கூடுதல் சுயாட்சி கேட்டு 2004 முதல் கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசுப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமான  அவ்வபோது மோதல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த மோதல், வன்முறை தாக்குதல்களில் 7,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் யாலா நகரில் நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இதுவென காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment