Saturday, 20 January 2018

இந்திரா காந்தி வழக்கு; ஜன.29இல் தீர்ப்பு


புத்ராஜெயா-
கூட்டரசு நீதிமன்றத்தில் ஓராண்டுக்கும் மேலாக நிலையில் இருக்கும் பாலர்பள்ளி ஆசிரியை திருமதி இந்திரா காந்தியின் வழக்கின் தீர்ப்பு ஜனவரி 29ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.

இந்திரா காந்திக்கும் அவரது முன்னாள் கணவர் முகமட் ரிடுவானுக்கும் இடையே இவ்வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு இந்திரா காந்திக்கு தெரியாமலேயே மூன்று பிள்ளைகளையும் இஸ்லாத்திற்கு மதம் மாற்றினார் ரிடுவான். இந்த மதமாற்றம் சட்டவிரோதமானது என கூறி இந்திரா காந்தி வழக்கு தொடுத்துள்ளார்.

ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ள இவ்வழக்கின் தீர்ப்பு ஜனவரி 29ஆம் தேதி வழங்கப்படும் என கூட்டரசு நீதிமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என இந்திரா காந்தியின் வழக்கறிஞரும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment