புனிதா சுகுமாறன்
ஈப்போ-
முதலாம் ஆண்டு மாணவர்கள் பள்ளிக்கு புத்துணர்ச்சியுடனும் அவர்கள்க்கு வேண்டிய அனைத்து பள்ளி உபகரணப் பொருட்களோடு செல்லவேண்டும். பணப் பற்றாக்குறையினால் சில மாணவர்கள் உபகரணப் பொருட்கள் இல்லாமல் பள்ளிக்கு வரும் சூழல் இனி தொடரக்கூடாது என்ற நல்ல நோக்கத்துடன் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பை, உபகரணப் பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன என்று மஇகா மகளிர் பிரிவு துணைத் தலைவி திருமதி தங்கராணி கூறினார்.
தேசிய மஇகா மகளிர் பிரிவின் ஆதரவில் ஈப்போ பாராட் செயலவை உறுப்பினர்களுடன் இணைந்து ஈப்போ பாராட் தொகுதியில் உள்ள 6 தமிழ்பள்ளிகளைச் சேர்ந்த 250 மாணவர்களுக்கு பள்ளி புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.
மேலும், நமது சமுதாயத்தினர் தங்களது பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டக்கூடாது. தமிழ்ப்பள்ளியில் பயின்றவர்களும் வெற்றியாளர்களாக உருவெடுத்துள்ளனர் என்பதை மறந்து விடக்கூடாது என்றார் அவர்.
No comments:
Post a Comment