Thursday, 25 January 2018
உடல் உறுப்புகளை தானம் செய்த 200,000க்கு அதிகமானோரின் சுயவிவரங்கள் கசிவு
கோலாலம்பூர்-
உடல் உறுப்புகளை தானம் செய்வதற்காக பதிந்து கொண்டுள்ள 200,000க்கும் அதிகமான பொதுமக்கள், அவர்களது வாரிசுகளின் தனிபட்ட விவரங்கள் 'ஆன் லைனில்' கசிய விடப்பட்டுள்ளதாக Lowyat.net என்ற அகப்பக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு உடல் உறுப்புகளை தானம் செய்வதற்காக தங்களை பதிந்து கொண்டுள்ள மக்களின் சுயவிவரங்கள் அடங்கிய கோப்பு 'ஆன் லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் அவர்களது பெயர், அடையாள அட்டை எண், இனம், குடியுரிமை, முகவரி, தானம் செய்பவரின் தொலைபேசி எண் ஆகிய தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளது.
தானம் வழங்குவபவர்களின் தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளதால் 440,000 பேர் வரை பாதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.
ஆசியாவிலேயே மிகப் பெரிய தகவல் கசிவு சம்பவமாக கைபேசி வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசியப்பட்ட சம்பவம் நடைபெற்ற மூன்று மாதங்களிலேயே மற்றொரு சுயவிவர தகவல் கசிவு சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 46 மில்லியன் கைப்பேசி பயனர்களின் தகவல்கள் கசியவிடப்பட்டது தொடர்பில் மலேசிய அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment