Friday, 5 January 2018

"2.0,இரும்புத்திரை,சண்டைக்கோழி-2, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறேன்"- நட்சத்திர விழாவில் அணிவகுக்கும் டீஸர், டிரெய்லர், இசை வெளியீடு


கோலாலம்பூர்-

கோலாலம்பூரில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ள 'நட்சத்திர திருவிழா'வில் பல்வேறு திரை அம்சங்களும் இடம்பெறவிருக்கின்றன.

வரும் 6ஆம் தேதி புக்கிட் ஜாலில் அரங்கில் தென்னிந்திய நடிகர் சங்க கட்டட நிதிக்காக நடத்தப்படும் இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள '2.0' படத்தின் டீஸர் வெளியிடப்படவுள்ளது. இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் சித்திரை புத்தாண்டுக்கு வெளியாகவுள்ளது.

மேலும் நடிகர் விஷால் நடித்து தயாரித்துள்ள 'இரும்புத்திரை' படத்த்தில் டிரெய்லரும் இசையும் வெளியிடப்படவுள்ளன. அதோடு 'சண்டக்கோழி-2' படத்தின் டீஸரும் வெளியீடு காணவுள்ளது.

தொடர்ச்சியாக  நடிகர் விஜய் சேதுபது- கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறேன்'  படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment