Wednesday, 3 January 2018

சிம்மோர் தமிழ்ப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையில் சரிவு; 16 பேர் மட்டுமே பதிவு


புனிதா சுகுமாறன்
ஈப்போ-
சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தியாகராஜன் கூறினார்.

இப்பள்ளி தோட்டப்புறத்தின் உட்புறப்பகுதியில் இருப்பதால் இலவசமாக பேருந்து சேவை வழங்கியும் மாணவர் எண்ணிக்கை சரிவு கண்டுள்ளது. பள்ளி உட்புறப் பகுதியில் அமைந்திருப்பதால் பெற்றோர்கள் பிள்ளைகளை இங்கு அனுப்புவதற்கு தயக்கம் காட்டுகின்றனர் என்பது வேதனையாக உள்ளது என அவர் மேலும் சொன்னார்.

இவ்வாண்டு முதலாம் ஆண்டுக்கு 16 மாணவர்கள் மட்டுமே பதிந்து கொண்டுள்ளனர் என்றார் அவர்.

No comments:

Post a Comment