புனிதா சுகுமாறன்
ஈப்போ-
2017 கடந்து இன்று 2018 புத்தாண்டில் காலடி எடுத்து வைத்துள்ளோம். கடந்த வருடத்தில் நினைத்த, கனவு கண்ட பல லட்சியங்கள், திட்டங்களை வெற்றிகரமாக முடித்திருப்போம். அதில் சிலவற்றை செய்யாமல் விட்டு வைத்திருப்போம்.
பிறந்திருக்கும் இந்த புத்தாண்டில் அதே போன்ற கனவுகளும் திட்டங்களும் நம்மிடம் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றை அடைவதற்கான வியூகங்களையும் வழிமுறைகளையும் வகுக்க வேண்டியது நமது கடமையாகும். அவ்வகையில் பிறந்திருக்கும் 2018இல் அணிவகுத்து நிற்கும் லட்சியங்களை 'பாரதம்' மின்னியல் தளத்துடன் பகிர்ந்துக் கொண்டனர் பலர். அவர்களின் கருத்துகளின் தொடர்ச்சியை இங்கே காண்போம்.
- நிதியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற வேண்டும் என்பதே இவ்வாண்டு தொடக்கத்தின் லட்சியமாகும்.
* சன் யொக் லெங் @ஓவியா
- இந்த ஆண்டு 5ஆம் படிவ பயில்கிறேன். எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேச்சி பெற்று சிறந்த மாணவியாக விளங்க வேண்டும்.
* சுரேன்
- 2018ஆம் ஆண்டில் காத்திருக்கும் பிடி3 தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு.
* குமரன் & சிட்டிசன் சுரேஷ்
- மிமிக்ரி கலைத்துறையில் புதிய குரலில் சாதிப்பதே 2018 ஆம் ஆண்டின் லட்சியம் என்கிறார் பல குரல் மன்னன் ஆஸ்ட்ரோ புகழ் மிமிகிரி ஆர்ட்ஸ் கலைஞர் குமரன் (பினாங்கு).
- வடமாநில கலைஞர்கள் மத்தியில் சிட்டிசன் சுரேஷ் பிரபலமானவர். சிட்டிசன் இசைக்குழுவை வழிநடத்தி வரும் இந்த இளைஞரின் 2018ஆம் ஆண்டில் இவரது 'கனவு ' கனவே கலையாதே' பாடலை பொங்கல் தினத்தன்று மலேசிய ரசிகர்களுக்கு வெளியிடுவதாகவும் இந்த பாடலின் தனித்துவம் பிரபல இசையமைப்பாளர் உயிரை துலைத்தேன் 'பாடல் புகழ் ஜெய் இசையமைத்துள்ள இப்பாடலை எழுதியதும் பாடியதும் நான் தான். இதுதான் என்னுடைய புத்தாண்டு கனவு என்கிறார் சிட்டிசன் சுரேஷ்.
* கவியரசன் - அபிராமி
- மலேசிய மக்கள் அனைவருக்கும் 2018இன் புத்தாண்டு வாழ்த்துகளை
தெரிவித்துக் கொள்கொள்கிறோம்.
* குமாரி ரஞ்சினி
- இன்று பிறந்துள்ள 2018 புத்தாண்டு வாழ்வில் மகிழ்ச்சியையும் முன்னேற்றத்தையும் அளிக்க வேண்டும்.
- முற்றும் -
No comments:
Post a Comment