Saturday 30 December 2017
மும்பையில் விபரீதம்; துணி ஆலை தீ விபத்தில் 15 பேர் பலி
மும்பை-
மும்பையில் செயல்படும் கமலா துணி ஆலையின் மூன்றாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியானதோடு 16 பேர் தீப்புண் காயங்களுக்கு இலக்காகினர்.
மும்பையில் பிரசித்திப் பெற்ற சேனாதிபதி மார்க், லோவர் பரேல் கட்டடத்தில் பின்னிரவு 12.30 மணியளவில் துணி ஆலையின் மூன்றாவது மாடியில் தீப்பற்றியது. இதனை கண்ட பொதுமக்கள் கொடுத்த தகவலில் சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்புப் படையினர் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
தீப்புண் காயங்களுக்கு ஆளானவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக மீட்புப்படை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த தீச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டிவிட்டர் அகப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment