Monday 13 November 2017

மக்களுக்கான எனது சேவை அரசியல் நோக்கம் கொண்டதில்லை- யோகேந்திரபாலன்


ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-

சுங்கை சிப்புட் மக்களுக்கு நான் ஆற்றும் சேவை அரசியல் நோக்கம் கொண்டதல்ல; மாறாக இங்குள்ள மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையும் பற்றுமே காரணம் என மதிலன் நிறுவன இயக்குனர், தொழிலதிபர் யோகேந்திரபாலன் தெரிவித்தார்.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னரே இங்குள்ள மக்களுக்கான எனது சேவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த உதவிகள் எனது ஆத்ம திருப்திக்காக மேற்கொள்ளப்படுகிறது.

சிறுவயதில்  வறுமையான சூழலில் வாழ்ந்த வேளையில் இங்குள்ள மக்களின் உதவியும் ஆதரவும் எங்களது குடும்பத்திற்கு கிடைத்தது.  அன்று உதவிய அன்பர்களுக்கு மீண்டும் உதவிடும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சேவை இன்று பலருக்கு உதவிடும் வகையில் நீண்டுள்ளது என இங்கு மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 'இஸ்லாமிய மார்க்க தமிழ் விழா' நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

சுங்கை சிப்புட் இந்திய முஸ்லீம் பள்ளிவாசல் மேற்கொண்டுள்ள மண்டபம் கட்டும் நடவடிக்கைக்கு எனது பங்களிப்பு இருக்கும் என கூறிய யோகேந்திரபாலன், இந்த மண்டபத்திற்கு நன்கொடையாக 10 ஆயிரம் வெள்ளி வழங்குவதாக அறிவித்தார்.

No comments:

Post a Comment