டோக்கியோ-
சுதந்திர ஜனநாயக கட்சியை சேர்ந்த ஷின்சோ அபே (63) மீண்டும் பிரதமராக
இன்று தேர்வு செய்யப்பட்டார்.
ஜப்பானில் பிரதிநிதிகள்
சபைக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி நடைபெற்றது.
மொத்தமுள்ள 465 இடங்களில் சுமார் 1,200 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில், மொத்தமுள்ள 465 இடங்களில்
ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி 312 இடங்களை கைப்பற்றியது.
மூன்றில் இரண்டு பங்கு இடம் கிடைத்துள்ளது என்பதால் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான
கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
இவர் கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து
தொடர்ந்து பிரதமராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment