Thursday 19 October 2017

பகைமையை மறந்து ஒற்றுமையை கொண்டாடுவோம்- டத்தோ சிவராஜ்

கோலாலம்பூர்-
தீபத் திருநாளைக் கொண்டாடும் மலேசிய வாழ் இந்துக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.  பகைமையை மறந்து ஒற்றுமையுடன் இந்த தீபத் திருநாளைக் கொண்டாடுவோம் என மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ் குறிப்பிட்டார்.

பல இன மக்கள் வாழும் இந்நாட்டில் இத்தீபத் திருநாளானது மலேசியர்களிடையே நல்லிணக்கமும் ஒற்றுமையும் மேலோங்குவதற்கு ஊன்றுகோலாக அமைய வேண்டும்.
ADVERTISEMENT

நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் நம் சமுதாய இளைஞர்களிடையே நல்ல சிந்தனைகளை மேலோங்க செய்து,  சமுதாய மாற்றத்திற்கும் பாடுபட வேண்டும்.

மக்களின் தேவைக்காக அரசு பல நல்லத் திட்டங்களை வழிவகுத்து வருகிறது. இந்தத் திட்டம் நிச்சயமாக இந்தியர்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது. அந்த நம்பிக்கையோடு இந்தத் தீபத் திருநாளை மகிழ்ச்சி பொங்க கொண்டாட ம.இ.கா இளைஞர் பிரிவினர் சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
ADVERTISEMENT

No comments:

Post a Comment