Thursday 12 October 2017

'ஜே ஜே கறி ஹவுஸ்' உணவகம் - திறந்து வைத்தார் டத்தோ ஏகேஎஸ்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
உணவகத் துறையில் ஈடுபடும் இந்தியர்களின் எண்ணிக்கை அண்மையக் காலமாக சரிவு கண்டு வரும் வேளையில் உணவகத் துறையில் வெற்றிக் கொடி நாட்ட முயற்சித்துள்ளார் ஜெயபாலன் ஜெயராமன்.

விலைவாசி ஏற்றம், அந்நியத் தொழிலாளர்களின் பற்றாக்குறை, வாடிக்கையாளர் சரிவு என உணவகத் தொழிலே கேள்விக்குரியாகி வந்துள்ள நிலையில் துணிச்சலுடன் புதிய உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார் இவர்.
சுங்கை சிப்புட், தாமான் முஹிபா ஜெயா 1இல் 'ஜே ஜே கறி ஹவுஸ்' எனும் இந்த உணவகத்தின்  திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
கேட்டரிங் உட்பட பல துறைகளில்  முத்திரை  பதித்த தொழிலதிபர் 'மகிழ்ச்சி நாயகன்' டத்தோ டாக்டர் ஏ.கே.சக்திவேல் இந்த கடையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

தொடக்கத்தில் சிறு சிறு உணவுகளை தயார் செய்து கொடுத்து வந்த வேளையில்  கம்போங் செந்தோசாவில் சிறிய அளவில் ஒரு கடையை திறந்து நடத்தி வந்தேன்.
வாடிக்கையாளர்கள் வழங்கி வந்த ஆதரவை கொண்டு பெரிய அளவிலான உணவகத்தை திறக்க வேண்டும் என எண்ணம் கொண்டிருந்த வேளையில், குடும்பத்தினரின் ஆதரவோடு தற்போது இந்த உணவகத்தை திறந்துள்ளதாக ஜெயபாலன் கூறினார்.
ஜே ஜே கறி ஹவுஸ்' உணவகம் திறப்பு விழாவில் சுங்கை சிப்புட் மாவட்ட ஏசிபி பரமேஸ்வரன், ஜாலோங் போலீஸ் நிலைய தலைவர் கேசவன், சுங்கை சிப்புட் தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன், ஒரே மலேசியா சமூகநல இயக்கத்தின் தலைவர் கணேசன், சுங்கை சிப்புட் பிஎஸ்எம் கட்சி தலைவர் அகஸ்டின், ஜெயபாலன் குடும்பத்தினர் உட்பட திரளாக கலந்து கொண்டனர்.

இந்த உணவகத்தை திறந்துள்ள  ஜெயபாலனுக்கு சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment