Thursday 19 October 2017

இந்துக்களின் வாழ்வில் சுபிட்சம் நிலைபெற வேண்டும்- தாஸ் அந்தோணிசாமி

ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
தீபாவளி திருநாளை கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை சுங்கை சிப்புட் மலேசிய மக்கள் சக்தி கட்சி தெரிவித்துக் கொண்டது.

தீபாவளி திருநாளை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் வசதி குறைந்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்களும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன  என அதன் தலைவர் தாஸ் அந்தோணிசாமி தெரிவித்தார்.
ADVERTISEMENT

அதோடு கட்சியின் வளர்ச்சிக்கு துணை நின்று தோள் கொடுக்கும் தொகுதி கிளைத் தலைவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டதோடு பல்வேறு உதவிகளை வழங்கி வரும் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரனுக்கு நன்றியை தெரிவித்துக் 
கொள்வதாக அவர் சொன்னார்.
தீபாவளி பெருநாளைக் கொண்டாடி மகிழும் இந்துக்களின் வாழ்வில் சுப்ட்சமும் அமைதியும் நிலைபெற்றிருக்க வேண்டும் என தாஸ் அந்தோணிசாமி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment