Thursday 19 October 2017

புதிய மாற்றமே 'தீபாவளி' வெற்றியாக அமையட்டும்

ஈப்போ-
நாட்டின் பொருளாதார சரிவு, ஜி.எஸ்.டி ஏற்றம் ஆகியவை மக்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் இந்துக்கள்  தீபத்திருநாளைக் கொண்டாடும் வேளையிம் மிதமாகவும், சிறப்பாகவும் கொண்டாட வேண்டும் என சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் குறிப்பிட்டார்.

மாற்றத்திற்கு 'மலேசியா' தயாராகி வரும் வேளையில் இந்த தீபாவளியோடு நம்மை ஆட்டி படைக்கும் 'நரகாசுரர்கள்' காணாமல் போய்விடுவர் என்பது மட்டும் திண்ணம்.

அவ்வகையில் இந்த தீபாவளி புதிய மாற்றத்திற்கு வித்திடுவதோடு வெற்றியை கொண்டாடுவதற்கும் தயாராகுவோம்.
ADVERTISEMENT

இந்த நல்ல வெற்றித் தருணம் தீபச் சுடராக நம்மை வந்தடைய நாம் அனைவரும் கைக்கோர்த்துச் செயல்பட வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கின்றோம்.

இவ்வேளையில் , தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment