Saturday 23 September 2017

'தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம்' - நடிகர் கமல்

சென்னை-
தமிழக மக்கள் விரும்பினால் முதலமைச்சராவேன் என நடிகர் கமல்ஹாசன் தனதுவிருப்பத்தை தெரிவித்துள்ளார்.

நேற்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை சந்தித்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் அரசியல் குறித்த பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
"அரசியலுக்கு நான் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது, தமிழக மக்கள் விரும்பினால் முதல்வராவேன். தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழலை கருதி இம்முடிவுக்கு வந்துள்ளதாகவும் ஊழக்கு எதிரான போராட்டமாகவே எனது முடிவு அமைந்துள்ளது" என கமல்ஹாசன் கூறினார்.

மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்திருந்த அர்விந்த் கெஜ்ரிவால் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைய காலமாக தமிழக அரசியல் நிலவரம் குறித்து கமல் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment