Friday 22 September 2017

எரிவாயு கொள்கலன் வெடித்தது; 8 பேர் படுகாயம்

சுபாங்-
எரிவாயு கொள்கலன்  வெடித்த சம்பவத்தில் 8 பேர் கடுமையான காயங்களுக்கு இலக்காகினர்.

ஜாலான் சுபாங்கில் உள்ள 'கோப்பிதியாம்' குழுமத்தின் கிடங்கில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மியன்மார், நேப்பாள் நாட்டைச் சேர்ந்தவர்கள் அந்நியத் தொழிலாளர்கள் ஆவர்.
இந்தக் கோப்பித்தியாம் குழுமத்தில் சமைக்க பயன்படுத்தப்படும் எரிவாயு கொள்கலன் வெடித்ததில் 6 பேர் கடுமையான தீக் காயங்களுக்கும் இருவர் சிராய்ப்பு காயங்களுக்கும் உள்ளானர்.

இதில் 7 பேர் சிகிச்சைக்காக செர்டாங் மருத்துவமனைக்கும் ஒருவர் கோலாலம்பூர் மருத்துவமனைக்கும்  கொண்டு செல்லப்பட்டனர் என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவட் ஏசிபி முகமட் அஸ்லின் சடாரி தெரிவித்தார்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில் அழைப்பு கிடைத்தவுடன் 10 நிமிடங்களில் 4 தீயணைப்பு வண்டிகளுடன் 30 அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment