Friday 4 August 2017

'ஹை-டீ வித் லீடர்ஸ்' விரைவில் அறிமுகம்


மின்னியல் ஊடகத்தில் புத்தாகத்தையும் உருமாற்றத்தையும் கொண்டு வருவதோடு மலேசிய இந்தியர்களிடையே ஒரு மாற்றத்தை விதைக்க வேண்டும் எனும்  நோக்கில் உருவாக்கப்பட்ட 'பாரதம்' மின்னியல் ஊடகம் புதிய பரிணாமத்தில் பயணிக்க எத்தனித்துள்ளது.

அதன் முதல்கட்ட நடவடிக்கையாக 'ஹை-டீ  வித் லீடர்ஸ்' (Hi-Tea with Leaders) எனும் தலைப்பில் சமுதாயத்தில் நிரம்பியுள்ள தலைவர்களுடனான கருத்து களம் கூடிய விரைவில் அறிமுகமாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போதைய நாட்டின் சூழலில் இந்திய சமுதாயத்திற்கான தலைவர்கள் பெருமளவு நிரம்பியே கிடக்கின்றனர். முன்பெல்லாம் அரசியலில், தலைமை பீடத்தில்  இருந்தவர்கள் மட்டுமே தலைவர்களாக உணரப்பட்டனர்.

ஆனால் இன்று அரசியலையும் தவிர்த்து திரும்பும் இடமெல்லால் பொது இயக்கங்களின் வாயிலாகவும் ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள் வாயிலாகவும் தலைவர்கள் முளைத்துள்ளனர்.

பதவியில் இருப்பவர்களின் குரல்கள் மட்டுமே ஊடகங்களை அலங்கரிக்கும் என்ற நிலையை மாற்ற வேண்டும் எனும் உயரிய நோக்கத்தில் 'ஹை-டீ வித் லீடர்ஸ்' அங்கம் இடம்பெறவுள்ளது.

இந்த அங்கத்தில் நாட்டின் தேசிய அரசியல் நீரோட்டம், பொருளாதாரம், இந்திய சமூகத்திற்கான மாற்றங்கள், தற்கால அரசியல் சூழல் உட்பட பல்வேறு கூறுகளை உள்ளடக்கி இடம்பெறவுள்ளது.

தலைமை பதவி வகிப்பவர்களை மட்டுமல்லாது சாதாரண நிலையில் இருந்து கொண்டு சமூகத்தின் மாற்றத்திற்காக குரல் கொடுக்கும்  'தொண்டனின்' குரலுக்கு மதிப்பளித்து அவரையும் 'தலைவராக' அங்கீகரிக்கும் வகையில், இந்த அங்கம் அறிமுகமாகவுள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரா.தங்கமணி,
தலைமை ஆசிரியர்,
பாரதம் மின்னியல் ஊடகம்


No comments:

Post a Comment