Tuesday 1 August 2017

டத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளியில் நோன்புப் பெருநாள் உபசரிப்பு


சுங்கை சிப்புட்,
இங்குள்ள டத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளியில்  நோன்புப் பெருநாள் உபசரிப்பு அண்மையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பள்ளி மாணவர் நலப் பிரிவும் பள்ளி இஸ்லாமிய கழகமும் இணைந்து ஏற்பாட்டில் பள்ளி முதல்வர் ஹாஜி ரோஸ்லான் பின் முகமட் தலைமையில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் மதிலன் நிறுவனர் இயக்குனரும் தொழில் அதிபருமான யோகேந்திரபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இப்பள்ளியில் அதிகமான இந்திய மாணவர்கள் பயில்கின்ற போதிலும் இஸ்லாமிய மாணவர்களின் கலாச்சார நடவடிக்கைகள் நடத்தப்படுவது எவ்வித இன பாகுபாடும் இல்லாமல் மாணவர்களிடத்தில் ஒரே மலேசியர் என்ற எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இத்தகையதோர் ஆரோக்கியமான சூழல் மாணவர்களிடத்தில் இப்போதே விதைக்கப்பட வேண்டும். அத்தகையதொரு முயற்சியாக இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பள்ளி முதல்வர் கூறினார்.

மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட கல்ல்வி அதிகாரி, மாணவர் நல துணை முதல்வர் கோ.நடராஜா, ஆசிரியர்கள், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment