Friday 11 August 2017

“எம்.ஜி.ஆரின் வாத்தியார் காளி என்.ரத்தினம்” புத்தக வெளியீடு சிறப்பு அம்சம்



கோலாலம்பூர்-
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை முன்னிட்டு 'பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017' நாளை ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு கோலாலம்பூரிலுள்ள டான்ஸ்ரீ  K.R. சோமா அரங்கில் நடைபெற இருக்கிறது. மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் மக்கள் திலகத்தை நினைவு கூறும் வகையில் இந்த கலை இரவை எம்.ஜி.ஆர். புரொடக்ஷன்ஸ் சேர்ந்த எம்.ஜி.ஆர் கலைமகள் பூங்கொடி மலேசிய கலை உலகம் குழுவினருடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த கலை நிகழ்ச்சியில் நடனம், இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எம்.ஜி.ஆர். சிறந்து விளங்கிய சிலம்பாட்டமும் சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருகிறது. இவற்றுடன் சேர்ந்து ஒரு புத்தக வெளியீடும் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், இந்நிகழ்வை சிறப்பிக்க எம்.ஜி.ஆர். தங்கராஜு, எம்.ஜி.ஆர் மதி ஆகியோரின் அபிநயம் நடைபெறுகிறது. ஏரா நடனக்குழுவினர் தங்கள் நடனத்தால் நம்மை மகிழ்விக்கவுள்ளார்.

பார்வையிழந்த பாடகர்களான திரு.நாகா, குமாரி காயத்ரி ஆகியோருடன் பாடகர்கள் TMS சிவகுரு, சென்னை TMS ராஜா, N.பாலா, ரமேஷ், ஷர்மிளா சிவகுரு, நளினா ஆகியோரும் இணைந்து  வருகையாளர்களை இசை வெள்ளத்தில் ஆழ்த்த திட்டமிட்டுள்ளனர்.

நமது பாரம்பரிய கலையான சிலம்ப சாகச நிகழ்ச்சியை மகாகுரு ஆறுமுகத்தின் புதல்வர் மகாகுரு அ.சிவகுமார் மாணவர்கள் மேடையில் நிகழ்த்த உள்ளனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர், சினிமா வரலாற்று ஆராய்ச்சியாளர் வா.பாலகிருஷ்ணன் எழுதியிருக்கும்எம்.ஜி.ஆரின் வாத்தியார் காளி என்.ரத்தினம்என்ற புத்தக வெளியீடு நடைபெறவுள்ளது.




இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ஆஸ்திரேலியாவில் இருந்து வெங்கட் ராவ், அவரது துணைவியார், பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன், பல நாடுகளில்  பெரும்புகழ் பெற்ற சிங்கப்பூர் எம்.ஜி.ஆர், சென்னை லயன்ஸ் கிளப் கவர்னர் டாக்டர். மணிலால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.

இந்நிகழ்வை மேலும் மெருகூட்ட பிரதான அறிவிப்பாளராக தமிழ் செல்வன் பங்காற்றுவார். கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர். தி லேஜேண்ட் 3 (MGR THE LEGEND 3), என்ற மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் கலைமகள் என்ற சிறப்புக்குரிய பட்டத்தினை பூங்கொடிக்கு சிங்கப்பூர் எம்.ஜி.ஆர் வழங்கியது குறிப்பிடத்தக்கது. பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017 நிகழ்வில் சிங்கப்பூர் எம்.ஜி.ஆர் சில கலைஞர்களுக்கு விருது வழங்கவுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மலேசியா பார்வையற்றோர் (MALAYSIAN ASSOCIATION FOR THE BLIND) சங்கத்திற்கு நன்கொடையாக ரிம.3,000 பார்வையற்றோர் முன்னேற்றத்திற்கு அந்த நிறுவனத்தின் உறுப்பினரிடம் காசோலையாக வழங்கப்படும்.



பிரமாண்டமான அரங்க அமைப்பு, ஒளி-ஒலி ஏற்பாடு, கண்கவர் கலை நிகழ்ச்சி என  எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு ஆண்டு பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017, சிறப்பாக நடைபெறும் என்று அதன் ஏற்பாட்டாளர் எம்.ஜி.ஆர் கலைமகள் பூங்கொடி தெரிவித்தார். இவரது இரண்டாவது நிகழ்ச்சியான பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017 நிகழ்ச்சி எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு என்றும் நினைவில் நிற்கும் நிகழ்வாகவும் அனைத்து தரப்பினரையும் கவரும் நிகழ்வாகவும் அமையும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment