Monday 21 August 2017

விரைவில் ‘என் அழகி காதலி’



மெக் சொவன் ரேஸின் என் அழகி காதலிஎனும் பாடல் வரி காணொளி விரைவில் வலையொளியில் வெளியீடு காணவுள்ளது. இந்த பாடலை மெக் சொவன் சுயமாக எழுதி, பாடி, இசையமைத்து வெளியீடு செய்யவுள்ளார்.

'செல்லம் நீயாடி' தனிப்பாடலுக்குப் பிறகு இந்த பாடலுக்கு இசையமைத்து பாடி வெளியீடு செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு பாடலை வித்தியாசமான இசையமைப்பில் இசையமைத்து விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளார் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் மெக் சொவன் ரேஷ்.

என் அழகி காதலி பாடலை பொருத்தமட்டில் ஒரு காதல் மெட்டாக அமைந்துள்ளது. இப்பாடலை டுவிட்ஸ் சிங் வலையொளி அலைவரிசையிலும் இணையத்தள குறுஞ்செயலிகளிலும் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி ஆதிகாரப்பூர்வமாக வெளியீடவுள்ளதாக பாரதமிற்கு அளித்த நேர்காணலில் மெக் சொவன் ரேஷ் தெரிவித்தார்.

ஒவ்வொரு படைப்புகளுக்கும் ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் அனைத்து இரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் இச்செய்தியின் வாயிலாக நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார் அவர்.

No comments:

Post a Comment