Thursday 17 August 2017

இந்தியர்களின் ஆதரவை பெற ஹிண்ட்ராஃப்புடன் துன் மகாதீர் சந்திப்பு


புத்ராஜெயா-

நாட்டின் 14ஆவது பொதுத்  தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நம்பிக்கைக் கூட்டணியுடன் ஒத்துழைக்கும் வகையில் ஹிண்ட்ராஃப் அமைப்பை துன் டாக்டர் மகாதீர் முகமது சந்தித்தார்.

ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவர் பி.வேதமூர்த்தியை சந்தித்த நம்பிக்கைக் கூட்டணியின்  அவைத் தலைவர் துன் மகாதீர் சந்திப்பின்  வழி இக்கூட்டணியின் ஹின்ட்ராஃப் ஒரு தோழமை அமைப்பாக இடம்பெறலாம் என நம்பப்படுகிறது.

எதிர்க்கட்சி கூட்டணியில் ஒரு வலுவான அமைப்பாக ஹிண்ட்ராஃப் அமையும் என முன்னாள் பிரதமருமான துன்  மகாதீர் தெரிவித்தார்.
நம்பிக்கைக் கூட்டணியில் இந்தியர் பிரதிநிதித்துவம் இல்லை. ஆனாலும் பல்வேறு கட்சிகளில் இந்தியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஹிண்ட்ராஃப் அனைத்துத் தரப்பு இந்தியர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மட்டுமின்றி தோட்டப்புற மக்களின் ஆதரவையும் ஹிண்ட்ராஃப் பெற்றுள்ளது.


நம்பிக்கைக் கூட்டணியின் பங்காளித்துவமாக இல்லாவிட்டாலும் எதிர்க்கூட்டணியின் ஓர் அங்கமாக ஹிண்ட்ராஃப்புடன் நாங்கள் ஒத்துழைப்போம் என துன் மகாதீர் கூறினார்.

ஹிண்ட்ராஃப் தலைமையில் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியர்களின் உரிமை மீட்புப் போராட்டம்  நாட்டில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற 12ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 3இல் 2 பெரும்பான்மை இழந்ததற்கு காரணமாக அமைந்தது.

புத்ராஜெயாவில் உள்ள துன் மகாதீரின் அலுவகத்ததில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது கெடா மாநில முன்னாள் மந்திரி பெசார் டான்ஶ்ரீ சனூசி ஜுனிட், முன்னாள் பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸைட் இப்ராஹிம் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment