Thursday 6 July 2017

'சுக்கிம்' போட்டி துணைப் பிரதமர் தொடக்கி வைக்கிறார்

சுங்காய்-
மலேசிய இந்தியர் விளையாட்டு கலாச்சார அறவாரியத்தின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மலேசிய இந்தியர் விளையாட்டு விழாவான (சுக்கிம்) நாளை 6ஆம் தேதி  அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவுள்ளது.

தஞ்சோங் மாலிமில் உள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் (உப்சிமாலை 5.00 மணியளாவில் நாட்டின் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி இதனை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார் என அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ வ.இளங்கோ தெரிவித்தார்.

மிஃபா தலைவர் டத்தோ டி.மோகன் தலைமையில் நடைபெறும் சுக்கிம் விழாவில் 12 மாநிலங்களைச் சேர்ந்த 1,737 விளையாட்டாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.



இதற்கு முன்னதாக 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை ஹாக்கி, காற்பந்து போட்டிகள் நடைபெற்றன. அதோடு பூப்பந்து, ஓட்டப்பந்தயம், டென்னிஸ், ஸ்குவாஷ், கராத்தே, சிலம்பம், தேக்குவாண்டோ, கபடி, உடல் கட்டழகு ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன.

9ஆம் தேதி இப்போட்டியின் நிறைவு விழா நடைபெறும் என  இங்கு சுங்காய் பகுதியிலுள்ள பிஎல்கேஎன் வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது டத்தோ இளங்கோ குறிப்பிட்டார்.
இச்சந்திப்பின்போது  12 மாநிலங்களின் தலைவர்களும் சுக்கிம் இயக்குனர்களும் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment