சுங்கை பாக்காப்-
நோன்புப் பெருநாளில் இனம், மதம் பாராமல் அனைவரையும் அரவணைத்து மகிழ்ச்சியாக
கொண்டாட வேண்டும், துயரங்கள் போக்கி கொண்டாடும் பண்டிகை காலங்களில்
பிறரின் துயரங்கள் போக்கி அவர்களையும் உற்சாகப்படுத்தி மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தி
தருவது நம்முடைய கடமையாகும் என பிரதமரின் பிரத்தியேக ஆலோசகரும், பினாங்கு மாநில அம்மோ கட்சியின் தொடர்புக்குழுத் தலைவருமான டத்தோஶ்ரீ ஜைசால் அபிடின் ஒஸ்மான்
தெரிவித்தார்.
செபெராங் பிறை வட்டாரத்தில் அமைந்துள்ள சுங்கை பாக்கப் மருத்துவ மனைக்கு
நோன்புப் பெருநாளை முன்னிட்டு நேரடியாக நோயாளிகளை நலம் விசாரித்து அன்பளிப்பு வழங்கியபோது
அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பெருநாள் காலங்களில் நாம் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது. வசதி குறைந்தவர்கள்,நோயாளிகள், ஆதரவற்ற குழந்தைகள், கைவிடப்பட்டவர்கள் முதியோர்கள் என அனைவரையும் மனிதாபிமானத்தோடு அரவணைக்க வேண்டும்.
அது நம்முடையக் கடமையாகும்.
அவர்களை நாம் புறக்கணிக்காமல் அவர்களுக்கு இதுபோன்ற அன்பளிப்புகளை வழங்கும்போது
அவர்கள் புத்துணர்ச்சி அடைகின்றனர் .மகிழ்ச்சியில் ஆழ்த்தப்படுகின்றனர்
என்றார் அந்த நோக்கத்தில் இந்த அன்பளிப்புகளை வழங்கியதாக கூ மேலும் கூறினார்.
மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்த அவர், நோயாளிகளுக்கு
ஆறுதலான வார்த்தைகளை கூறியது மட்டுமல்லாமல் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களையும்
தெரிவித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment