கோலாலம்பூர்-
நாடறிந்த
எழுத்தாளர் பெரியவர் பூ.அருணாசலத்தின் திடீர் மறைவு எழுத்துலகில் மட்டுமல்லாது சரித்திரம் அறிந்தவர்களிடையே
ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என மதிலன் நிறுவனத்தின் உரிமையாளர் யோகேந்திர பாலன்
தனது அனுதாபத்தைத் தெரிவித்துக்
கொண்டார்.
சுங்கை
சிப்புட் சரித்திரத்தை முழுமையாக அறிந்து வைத்திருந்தவர்களில் ஒருவர் பூ.அருணாசலம் ஆவார்.
நாட்டின் சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்ட துன் வீ.தி.சம்பந்தன் வரலாறு, கம்யூனிஸ்டு
காலகட்டத்தில் அனுசரிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம், பல்வேறு தலைமைகளின்
வரலாறு என சுங்கை சிப்புட் நகரின் வரலாற்றை தன்னகத்தே கொண்டிருந்த மிகப் பெரிய தகவல்
களஞ்சியமாக பூ.அருணாசலம் திகழ்ந்தார்.
அதுமட்டுமல்லாது
துன் சம்பந்தனுக்கு பிறந்த நாள் விழாவை ஏற்று நடத்தி அவரின் புகழை இளைய சமுதாயத்தினர்
மத்தியில் கொண்டுச் சென்ற பெருமை அன்னாரையே சாரும்.
பல்வேறு
தரப்பினரிடம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள பூ.அருணாசலத்தின் மறைவால் வாடும் அவர்தம்
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளும் வேளையில், அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது யோகேந்திர பாலன்
குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment