Saturday 24 June 2017

இந்திய முஸ்லீம் பள்ளிவாசலில் நோன்புப் பொட்டலங்கள் அன்பளிப்பு

சுங்கை சிப்புட், ஜூன் -
நோன்புப் பெருநாளை  முன்னிட்டு வசதி குறைந்த மக்கள் நோன்புப் பெருநாளை கொண்டாடி மகிழும்  வகையில் சுங்கை சிப்புட் மஇகா நோன்புப் பொட்டலங்களை வழங்கி சிறப்பித்தது.


இந்நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் பெருவிழாவான  நோன்புப் பெருநாளை சில வசதி குறைந்த மக்களும் சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும் எனும் நோக்கத்தில் அன்பளிப்புப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.


அண்மையில் இங்குள்ள இந்திய முஸ்லீம் பள்ளிவாசலில் நடைபெற்ற இந்நிகழ்வில், லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சூல்கிப்ளி அன்பளிப்புப் பொட்டலங்களை எடுத்து வழங்கினார்.

ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நிகழ்வில் சுமார் 100 பேருக்கு அன்பளிப்புபொட்டலங்கள் வழங்கப்பட்டன என தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து தெரிவித்தார்.



இந்நிகழ்வில் பேராக் மாநில இந்திய முஸ்லீம் சங்கத்தின் தலைவர் அரிஃப், தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன், சுங்கை சுப்புட் இந்திய முஸ்லீம் பள்ளிவாசல் உஸ்தாத் மன்சூர் அலி மிஸ்பாஹிமஇகா இளைஞர் பிரிவுத் தலைவர்  மு.நேருஜி, துணைத் தலைவர் எஸ்.லிங்கேஸ்வரன், கவுன்சிலர் லெட்சுமணன், கிளைத் தலைவர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment