சுங்கை
சிப்புட்-
வரும் 14ஆவது பொதுத்
தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகாவின் தேசிய துணைத் தலைவர் டத்தோஶ்ரீ
எஸ்.கே.தேவமணி போட்டியிடக்கூடும் என பரவலாக
பேசப்படுகிறது.
கடந்த 13ஆவது பொதுத்
தேர்தலில் இத்தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கிய டத்தோஶ்ரீ தேவமணி,
அவரை எதிர்த்து போட்டியிட்ட டாக்டர் ஜெயகுமாரிடம் 2,600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இதனிடையே, 14ஆவது பொதுத்
தேர்தலுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இத்தொகுதியில் தேமு வேட்பாளராக
களமிறக்கப்படுபவர் யார்? என்ற கேள்வி வலுத்து வருகிறது.
இந்த தொகுதியில்
களமிறங்குவதாக பலரது பெயர் அடிபடுகின்ற நிலையில் தற்போது புதிதாக டத்தோஶ்ரீ தேவமணி
பெயரும் அடிப்பட தொடங்கியுள்ளது.
டத்தோஶ்ரீ
தேவமணியின் பெயர் அடிப்படுவதால் இரு வெவ்வேறான கருத்துகள் எழுகின்ற நிலையில் மக்களின்
ஆதரவை தேவமணி பெறுவாரா?
என்பதே மிகப் பெரிய கேள்விக்குறியாகும்.
மிகப் பெரிய
அரசியல் அடிச்சுவட்டை கொண்டுள்ள சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேமு வேட்பாளராக
மஇகாவின் தலைமைச் செயலாளர் டத்தோ அ.சக்திவேல், கல்வி
துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் ஆகியோரின் பெயர்கள் அடிப்படுகின்ற
சூழலில் இம்மண்ணின் மைந்தருக்கு இத்தேர்தலில் போட்டியிட ஒருமுறை வாய்ப்பு வழங்கப்பட
வேண்டும் என்ற கோரிக்கையும் பலம் பெற்று வருகிறது.
No comments:
Post a Comment