தமிழ் சினிமாவில்
புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் விஜய். இவர் சிறுவயதிலிருந்தே தன் தந்தை
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தின் படங்களில்
நடித்து வந்தார். இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம்தான்
‘நாளைய தீர்ப்பு’. ஆம், இந்தப்
படத்திற்கு பிறகு இவரை பலர் குறையாகவே விமர்சித்தனர்.
ஆனால், இன்று
இவரின் நடிப்பு உலகெமெங்கும் போற்றப்படுகின்றது. நடிப்பில் மட்டுமல்லாமல், பாடகர், டான்ஸர், என தனக்கென ஒரு பாதையை அமைத்து
பீடுநடைபோடுகிறார் இளைய தளபதி விஜய்.
தான்பட்ட அவமானங்களை எதையும் பொருட்படுத்தாமல் அடுத்த கட்டத்திற்கு துணிச்சலாக நோக்கி
சென்றவர். ‘தமிழ் சினிமாவிற்கு தேவையில்லாத
முகம்’ என்று குறைகூறப்பட்டதை தள்ளிவைத்து, இன்று இதே தமிழ் சினிமா துறையில் புகழ் பெற்று வலம் கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில்
விஜயின் ஏற்ற இறக்கங்கள் அவரை 'தலைவராக; ஏற்றுக் கொண்டுள்ள
ரசிகர்கள் பின்பற்ற வேண்டிய முகங்கள் ஆகும்.
வெற்றி
பெறும் போதெல்லாம் தலைகணத்தை காட்டாமல் தோல்வியடையும்போது துவண்டு விடாமல் இரண்டையும்
சரிசமமாக ஏற்று இன்று உச்ச நட்சத்திரமாக திகழ்வது சாதாரண விஷயமல்ல.
தான் கடந்து
வந்த வாழ்க்கை பாதை முட்களும் கற்களும் நிறைந்தது என்றாலும் அதனை ஒரு படிப்பிணையாக
ரசிகர்களுக்கு கொடுத்துள்ள நடிகர் விஜய்க்கு இன்று (22.6.2017) 'இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை'
தெரிவித்துக் கொள்வோம்.
No comments:
Post a Comment