சுங்கை
சிப்புட்-
நான் பிறந்து
வளர்ந்த மண்ணில் உள்ள மக்களுக்கு மேற்கொள்ளும் சேவையில் எவ்வித அரசியல் நோக்கமும் கிடையாது
என மதிலன் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழில் அதிபருமான யோகேந்திர பாலன் தெரிவித்தார்.
இங்குள்ள
மக்களுக்கு பல வகையில் உதவிகள் புரிய வேண்டும் என்பது என ஆசை. அதனை நிறைவேற்றிக்
கொள்ளும் வகையிலே அண்மைய காலமாக சமூக சேவைகளை முன்னெடுத்து வருகின்றேன்.
தோட்டப்புறந்தில்
பிறந்து வளர்ந்து பல்வேறு இன்னல்களை சந்தித்து இன்று வாழ்க்கையில் ஒரு தொழிலதிபராக
முன்னேறி நிற்கின்றேன்.
சிறு வயதாக இருக்கும்போது பல்வேறு கஷ்டங்களை என் குடும்பம் எதிர்நோக்கியது.
அந்த சூழலில் பலர் எங்களுக்கு உதவிகளை வழங்கினர்.
அத்தகைய
உதவிகளை புரிந்தவர்களுக்கு நன்றி மறக்காமல் ஏதேனும் உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சிறு அளவில் மேற்கொண்டேன்.
அந்த சேவையே
இப்போது தொடர்ந்து இங்குள்ள பலருக்கு சேவைகளை வழங்கும் நிலைக்கு உருமாறியுள்ளது. இதுதான் நான்
செய்யும் சேவைகளுக்கு அடிப்படை காரணமே தவிர அதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் கிடையாது.
இந்த சேவைகளை
மேற்கொள்வதற்கு என் துணைவியாரே முதல் காரணம். அவர் கொடுத்த ஊக்கமே இந்த சமூகச் சேவைகளை
மேற்கொள்வதற்கு தூண்டுதலாக அமைந்துள்ளது என இங்கு நடைபெற்ற பிறந்தநாள் விருந்துபசரிப்பில்
உரையாற்றியபோது யோகேந்திர பாலன் தெரிவித்தார்.
யோகேந்திர
பாலனின் பிறந்தநாள் உபரிசரிப்பு நிகழ்வில் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, செயலாளர் கி.மணிமாறன், சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் தலைவர்
வீ.சின்னராஜு, சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ்
துணைத் தலைவர் பரமேஸ்வரன், பொது இயக்கங்கள், அரசியல் கட்சியினர், ஆசிரியர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment