புத்ராஜெயா-
உயர்கல்விக்கூடங்களில் பயில்கின்ற வெளிநாட்டு மாணவர்கள் வகுப்புக்கு
நீண்ட நாட்கள் வராமல் இருந்தால் உயர்கல்வி அமைச்சுக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக, கல்லூரி நிர்வாகங்கள்
புகார் அளிக்க வேண்டும் என குடிநுழைவுத் துறையில் இயக்குனர் டத்தோஶ்ரீ முஸ்தபார் அலி
தெரிவித்தார்.
இங்கு மாணவர்
விசாவில் படிக்க வந்து போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு கைது செய்யப்படும் வெளிநாட்டு
மாணவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என சில தரப்பினர் கருத்துகள் தெரிவிப்பதை தொடர்ந்து
அவர் இவ்வாறு கூறினார்.
காணாமல்
போகும் மாணவர்கள் பற்றி சில உயர்கல்விக்கூடங்கள் மட்டுமே புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்ட
அவர், வெளிநாட்டு மாணவர்கள் இங்கு படிக்கத்தான் வருகின்றனர் என்பதை உறுதி செய்ய உயர்கல்வி
அமைச்சுடன் குடிநுழைவுத்துறை இணைந்து செயலாற்றி வருகிறது என்றார்.
கடந்த 2015, 2016ஆம்
ஆண்டுகளில் 358 வெளிநாட்டு மாணவர்கள் போதைப்பொருளை பயன்படுத்தியதற்காகவும்
கடத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டனர் என புக்கிட் அமான் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின்
இயக்குனர் டத்தோஶ்ரீ முகமட் மொக்தார் அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment