Monday, 26 June 2017

மஇகாவின் அடுத்த செனட்டர் யார்?



கோலாலம்பூர்-
தற்போது காலியாகியுள்ள செனட்டர் பதவிக்கு யார் நியமனம் செய்யப்படுவர் என்ற கேள்வி தற்போது மஇகா வட்டாரத்தில் எழுந்துள்ளது.

கடந்த 22ஆம் தேதியோடு மஇகாவின் இரு செனட்டர்களான டத்தோஶ்ரீ எஸ்..விக்னேஸ்வரன், பகாங் மாநில தலைவர் டத்தோ ஆர்.குணசேகரன் ஆகியோரது பதவிக் காலம் நிறைவடைந்தது.

இதில் டத்தோஶ்ரீ விக்னேஸ்வரனின் பதவிக் காலம் இன்னும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நாடாளுமன்ற மேலவை சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டார்.

டத்தோ குணசேகரனின் பதவிக் காலம் நீட்டிக்கப்படாத நிலையில் தற்போது அந்த பதவி காலியாகியுள்ளது.

அப்பதவிக்கு யார் நியமனம் செய்யப்படுவர் என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ள நிலையில், இப்பதவிக்கு ஐவரின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக நம்பப்படுகிறது.

மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ அ.சக்திவேல், மஇகா தலைமை பொருளாளர் டத்தோஶ்ரீ சா.வேள்பாரிமஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ், மஇகா மகளிர் பிரிவுத் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக மஇகா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த ஐவரில் யார் அடுத்த செனட்டராக பதவியேற்கவுள்ளனர் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும் என அறியப்படுகிறது.




No comments:

Post a Comment