ஜோர்ஜ்டவுன்-
கடந்த 9ஆம் தேதி ஐந்து பேர்
கொண்ட கும்பலால் பகடிவதை செய்து கடுமையாக தாக்கப்பட்டு மரணமடைந்த தி.நவீன் தாயாருக்கு வாழ்நாள் முழுவதும் சொக்சோ எனப்படும் தொழிலாளர் பாதுகாப்பு
நிதி வழங்கப்படவுள்ளது.
பேரங்காடி ஒன்றில் பொருட்களை விளப்பரப்படுத்தும் வேலையை பகுதி
நேரமாக செய்திருக்கிறார் நவீன். ஆகையால்,
இந்த சொக்சோ உதவி பெற அவர் தகுதியானவர் என்று பினாங்கு சொக்சோ இயக்குனர்
அந்தோணி அருள் தெரிவித்துள்ளார்.
நவீன் குடும்பத்திற்கு மாதந்தோறும் வெ.672.00
வெள்ளி வழங்கப்படும். நவீனின் அப்பா, அம்மா, தங்கை ஆகிய மூவருக்கும் இந்த பென்ஷன் கிடைக்கப்பெறும்.
இவர்கள் மூவரும் இந்த பணத்தை சமமாக பிரித்து கொள்ளலாம். நவீன் தங்கைக்கு 21 வயது வரை அல்லது திருமணமாகும் வரை
இந்த பணம் வந்து சேரும் என்று அவர் கூறினார்.
அதோடு நவீனின் நல்லடக்கச் செலவாக வெ.2000.00க்கான காசோலையை அவர் வழங்கினார்.
No comments:
Post a Comment