சிரம்பான் -
பகடிவதைக்கு
உள்ளான பள்ளி முன்னாள் மாணவர் மரணமடைந்த
சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி அலை நாட்டு மக்களிடையே இன்னும் குறையாத சூழ்நிலையில்
தற்போது மற்றொரு மாணவர்களுக்கிடையிலான கைகலப்பு சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில்
மந்தின் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் என நம்பப்படும் இருவரிடையேயான கைகலப்பு
காணொளி குறித்து போலீசார் விசாரணையை முடக்கியுள்ளதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஸல்டினோ
ஸலூடின் தெரிவித்தார்.
இச்சம்பவம்
தொடர்பில் இதுவரை எவ்வித புகாரும் கிடைக்கப்பெறவில்லை. ஆயினும் இது
தொடர்பில் தொடக்கக்கட்ட விசாரணை முடக்கி விடப்பட்டுள்ளது.
இச்சம்பவம்
தொடர்பில் சம்பந்தப்பட்ட மாணவர்களை அடையாளம் காணும் பொருட்டு அப்பள்ளியை தொடர்பு கொள்வதாக
அவர் குறிப்பிட்டார்.
ஒரு நிமிடம்
மட்டுமே ஓடக்கூடிய இந்த காணொளியில் இரு மாணவர்கள் கைகலப்பில் ஈடுபடுவதையும் அதை பிற
மாணவர்கள் வேடிக்கை பார்ப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment