Tuesday, 20 June 2017

எம்ஐஇடி-இன் அறங்காவலராக டத்தோஶ்ரீ விக்னேஸ்வரன் நியமனம்!


கோலாலம்பூர்-
மஇகாவின் கல்வி அமைப்பான எம்ஐஇடி-இல் மேலவை சபாநாயகரும் மஇகா உதவித் தலைவருமான டத்தோஶ்ரீ எஸ்..விக்னேஸ்வரன் அறங்காவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எம்ஐஇடி-இன் 30ஆம் ஆண்டு பொதுக் கூட்டம் அண்மையில் நடைபெற்ற வேளையில் இந்த கூட்டத்தில் புதிய அறங்காவராக டத்தோஶ்ரீ விக்னேஸ்வரன் முன்மொழியப்பட்டு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் எம்ஐஇடி-இன் தலைவராக மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ உத்தாமா ச.சாமிவேலு தொடர்ந்து செயல்படுகின்றார்.


10 பேர் கொண்ட எம்ஐஇடி-இன் அறங்காவலர் குழுவில் மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன், டான்ஶ்ரீ ஜி.வடிவேலு, டான்ஶ்ரீ மாரிமுத்து ஆகியோரும் அடங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment