Friday, 23 June 2017

பிரபல மூத்த எழுத்தாளர் பூ.அருணாசலம் காலமானார்


சுங்கை சிப்புட்-
நாடறிந்த பிரபல எழுத்தாளரும் துன் சம்பந்தன்  பிறந்தநாள் விழாக்குழுத் தலைவருமான எழுத்தாளர் பூ.அருணாசலம்  காலமானார்.

சுங்கை சிப்புட் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் அருணாசலம், கூட்டுறவுத் தந்தை துன் வீ.தி.சம்பந்தனின் பற்றி இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு கட்டுரைகளை நாளிதழ்களில் எழுதி வந்துள்ளார்.

துன் சம்பந்தன் மீது கொண்ட அலாதி விசுவாசத்தினால் அவரது பிறந்தநாளை மிகச் சிறப்பாக கொண்டாடி  வந்துள்ளார்.

அன்னாரின் மரணம் இவ்வட்டார மக்களை அரசியல் தலைவர்களை மட்டுமின்றி எழுத்தாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


துன் வீ.தி.சம்பந்தனுக்கு மிக நெருக்கமானவராக இருந்து சுங்கை சிப்புட் வட்டார அரசியல, சரித்திர சான்றுகளை தனக்குள் உள்ளடக்கி ஒரு தகவல் களஞ்சியமாக வாழ்ந்த பூ.அருணாசலம் மறைவு தமிழ் எழுத்துலகிற்கு ஏற்பட்ட மிகப் பெரிய பேரிழப்பாகும்.

No comments:

Post a Comment