புத்ராஜெயா-
ஶ்ரீ பெர்டானாவில்
நடைபெற்ற நோன்புப் பெருநாள் உபசரிப்பில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான
மக்கள் கலந்து கொண்டது பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கான வலுவாக ஆதரவை புலப்படுத்துகிறது
என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.
கடந்த காலங்களை
காட்டிலும் இவ்வாண்டு நோன்புப் பெருநாள் உபசரிப்பில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை
பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதில் கூட்டரசுப்
பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது ஜோகூர், நெகிரி செம்பிலான், பேராக் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
இது அவர்கள்
பிரதமரை சந்திக்க வேண்டும் என்பதை காட்டுகிறது என டத்தோஶ்ரீ ஸாயிட் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment