புத்ராஜெயா-
இன்று கொண்டாடப்படும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிரதமர்
டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் திறந்த இல்ல உபசரிப்பில் அமைச்சர்கள், பிரமுகர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புத்ராஜெயாவிலுள்ள ஶ்ரீ பெர்டானாவில் பிரதமர் துறை இலாகா
ஏற்பாட்டில் காலை 10.00 மணி முதல் நடைபெற்ற திறந்த இல்ல
உபசரிப்பில் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி, கலை,பண்பாட்டு,
சுற்றுலா துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் நஸ்ரி அப்துல் அஸிஸ்,
அனைத்துலக வாணிப, தொழில் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ
முஸ்தபா முகமட் உட்பட பல்வேறு அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மூத்த குடிமக்கள், உடற்பேறு குறைந்தவர்களுக்கு
போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டதோடு அவர்களுக்கு உணவுகளும் பரிமாறப்பட்டன.
அதோடு இந்த உபசரிப்பில் கலந்து கொண்ட சிறார்களுக்கு பண முடிப்புகளை டத்தோஶ்ரீ
நஜிப் வழங்கினார்.
No comments:
Post a Comment