Tuesday 20 June 2017

பள்ளிகளுக்கு வெளியே குற்றச்செயல் ஆசிரியர்கள் மீது பழி போட வேண்டாம்!


கோலாலம்பூர்
-
பள்ளிகளுக்கு வெளியே நடக்கும் குற்றச்செயல்கள் தொடர்பில் ஆசிரியர்கள் மீது பழிபோடுவதை நிறுத்திக் கொள்ளும்படி தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

பள்ளிக்கு அப்பால் நடக்கும் விஷயங்கள் ஆசியர்கள் பற்றி ஆசிரியர்கள் அக்கறை கொள்ள வேண்டும் என விடுத்திருக்கும் கோரிக்கையில்  நிறைந்துள்ள சவால்களை கருத்தில் கொள்வது அவசியமாகும்.

ஆசிரியர்களின் பாதுகாப்பு குறித்து நாம் அக்கறை கொள்ளாவிட்டாலும் பள்ளிகளுக்கு வெளியே நடக்கும் குற்றச்செயல்களை கையாள்வதில் ஆசிரியர்கள் நிபுணத்துவம் கொண்டிருக்கவில்லை என  ஆசிரியர் பணியாளர் சங்கத்தின் பொதுச்  செயலாளர் டான்  ஹுவாட் ஹோக் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் சனிக்கிழமை  பள்ளி முன்னாள் மாணவர் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட 18 வயது இளைஞர் தி.நவீன் கடந்த வியாழக்கிழமை  நினைவு திரும்பாமலேயே மரணம் அடைந்தார்.
இது குறித்து கருத்துரைத்த பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங், பள்ளிக்கு அப்பாலும் மாணவர்கள் விஷயத்தில் பள்ளி பணியாளர்கள் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என விடுத்திருந்த கோரிக்கைக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

பள்ளிகளுக்கு வெளியே நடக்கும் பிரச்சினைகளில் குண்டர்கள், இரகசிய சங்கங்களைச் சேர்ந்த நபர்கள் சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன. இத்தகைய குற்றச் சம்பவங்கள் போலீசாரின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை.

ஆசிரியர் என்போர், சட்ட அலமாக்க அதிகாரிகள் அல்லர். அவர்கள் குழந்தை பராமரிப்பாள்ர்களோ அல்லது சமுதாயத்திற்கு 'ஆலோசனை வழங்குபவர்களோ அல்லர்.


சமுதாயத்தில் நிலவும் தீமைகளுக்கு ஆசிரியர்கள் மட்டுமே பொறுப்பேற்க முடியாது. பள்ளிகள், பெற்றோர்கள், போலீஸ் மற்றும் சமூகம் என பல தரப்பட்டவர்களின் ஒத்துழைப்பும் இவற்றைக் களைய அவசியமாகிறது என்று டான் குவாட் ஹோக் சொன்னார்.

No comments:

Post a Comment