பினாங்கு-
பகடிவதைக்கு
உள்ளாக்கப்பட்டு,
கொடூரமாக தாக்கப்பட்ட
தி.நவீன் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பினாங்கு
மருத்துவமனையில் மரணமடைந்தார்.
கடந்த சனிக்கிழமை
புக்கிட் குளுகோர்,
ஜாலான் காக்கி புக்கிட் திடலில் முன்னாள் மாணவர்களான சுமார்
16 முதல் 18 வயது வரையிலான ஐந்து நபர்களால் நவீனும்
அவரது நண்பர் பிரவீனும் கடுமையாக தாக்கப்பட்டார்.
அதோடு கடுமையான
தாக்குதலுக்கு ஆளான நவீன்,
ஓரின பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பட்டுள்ளார்.
மூளை சாவடைந்து
உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த நவீனக்கு பினாங்கு மருத்துவமனையில்
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை 5.31 மணியளவில்
அவரது உயிர் பிரிந்தது.
இச்சம்பவம்
தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நவீன் மரணமடைந்த
செய்தி மலேசியர்களிடையே மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment