புத்ராஜெயா-
பள்ளி மாணவர்களிடையே தலைவிரித்தாடும் கட்டொழுங்கு பிரச்சினைக்கு அத்தாட்சியாக
இந்திய மாணவர்கள் குடிபோதையில் ஆட்டம் போடும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
சமூக ஊடக
பயனர்கள், பொது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள இந்த காணொளியில் இடம்
பெற்ற சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாக கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தெரிவித்தார்.
'அச்சம்பவம் பள்ளிக்கு வெளியே நடந்துள்ளது. பகடிவதையை
கடுமையான பிரச்சினையாக கருதும் கல்வி அமைச்சு, மாணவர்களிடையே
நிலவும் கட்டொழுங்கு பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது'
என அவர் குறிப்பிட்டார்.
பள்ளி சீருடை
அணிந்திருக்கும் மாணவர் ஒருவர் மது அருந்தி விட்டு குடிபோதையில் ஆட்டம் போட, மற்ற மாணவர்கள்
அவருக்கு ஊக்கம் அளிக்கும் காட்சி அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment