Monday 12 June 2017

மக்கள் சேவையிலிருந்து பின்வாங்கிடாமல் எம்ஜிஆரின் கொள்கையை நிஜமாக்குங்கள் -யோகேந்திர பாலன் வலியுறுத்து


சுங்கை சிப்புட்-
மக்களின் இதயக்கனி, ஏழைகளின் நாயகன் என புகழ்சூட்டப்படும் 'மக்கள் திலகம்' எம்ஜிஆரின் பெயரில் செயல்பட்டு வரும், சுங்கை சிப்புட் எம்ஜிஆர் சமூகநல சேவை மன்றம் மக்கள் சேவையிலிருந்து பின்வாங்கக்கூடாது என மதிலன் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான யோகேந்திர பாலன் தெரிவித்தார்.

வறிய மக்களின் சேவைக்கு அடையாளமாக கருதப்படும் எம்ஜிஆர் ஆவார். ஒரு நடிகராக தனது திரைத்துறை வாழ்க்கையை தொடங்கிய எம்ஜிஆர், பின்னாளில் தமிழகத்தின் முதல்வராக ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்.


சினிமா திரைப்படங்கள், பாடல்கள் மூல நல்ல பல கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்த எம்ஜிஆர், தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்ற பின்னர் பல நல் திட்டங்களை முன்னெடுத்தார்.

பள்ளி மாணவர்களுக்காக அவர் தொடங்கிய  சத்துணவு திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது ஏழ்மை நிலையிலுள்ள மக்கள், தாய்மார்களுக்கான நல உதவிகள் போன்றவற்றை முன்னெடுத்ததன் விளைவாக இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத தலைவராக எம்ஜிஆர் திகழ்கிறார்.

அதேபோன்று எம்ஜிஆரின் பெயரில் இயங்கும் இந்த மன்றம் மக்களுக்கான சேவையை என்றும் வழங்க வேண்டும். மக்களின் சேவையிலிருந்து இவ்வியக்கம் பின்வாங்கிடக்கூடாது.

எம்ஜிஆரின் புகழ் பாடும் இந்த மன்றம் அவரது சிந்தனையையும் கொள்கைகளையும் உணர்ந்து அதற்கேற்ப தங்களது சேவையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என யோகேந்திர பாலன் குறிப்பிட்டார்.


சுங்கை சிப்புட் எம்ஜிஆர் சமூகநல சேவை மன்றத்தின் 7ஆம் வருட நிகழ்ச்சி அண்மையில் இங்குள்ள கோலகங்சார் மாநகர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற ஆதரவும் உதவியும் வழங்கிய நல்லுள்ளங்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு இம்மன்றத்தின் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும் என அதன் தலைவர் ஶ்ரீ ஹரி வேலுச்சாமி கூறினார்.

இந்நிகழ்வில் ஜாலோங் சட்டமன்ற உறுப்பினர் லோ, தொழிலதிபர் டத்தோஶ்ரீ கண்ணன், அமுசு ஏகாம்பரம், சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, கிள்ளான் தொழிலதிபர் என்.ராஜா, எம்ஜிஆர் புரொடக்ஷன் அன்பானந்தன் உட்பட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் யோகேந்திர பாலன் 130 பேருக்கு பணமுடிப்பு வழங்கியதோடு உதவி தேவைபடுவோருக்கு உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டன

No comments:

Post a Comment