சுங்கை
சிப்புட்-
வரும்
14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக
களமிறங்க தயாராகி கொண்டிருக்கிறேன் என தொழிலதிபர் யோகேந்திர பாலன் தெரிவித்தார்.
கடந்த இரு
தவணைகளாக தேசிய முன்னணி வேட்பாளர் தோல்வி கண்டதன் விளைவாக அங்குள்ள மக்கள் பெரும் இன்னல்களை
எதிர்கொண்டு வருகின்றனர்.
அடிப்படை
பிரச்சினைகள் உட்பட அவ்வப்போது ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு கஷ்டங்களை
எதிர்நோக்கக்கூடிய நிலையில் உள்ள மக்களுக்கு அவர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் களையக்கூடிய
ஒரு மக்கள் பிரதிநிதியே தேவைப்படுகின்றார்.
அதன் அடிப்படையில்
மக்களின் பிரச்சினைகளை தன்னால் களைய முடியும் என்ற நம்பிக்கையில் இத்தொகுதியில் தேசிய
முன்னணி வேட்பாளராக களமிறங்க தயாராகிக் கொண்டிருக்கிறேன்.
அரசியல்
ஆசை இல்லை என்ற போதிலும் மக்களின் பிரச்சனைகளை களைய ஒரு பிரதிநிதியாய் அவர்கள் என்னை
அணுகுவதால் இந்த தீர்க்கமான முடிவை எடுத்துள்ளேன்.
இங்கு பல்வேறு
சேவைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் என்னை சந்திக்கும் மக்களின் குறைகளை களையக்கூடிய
நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கு அடித்தளமாக அரசியல் தளம் வேண்டுமென்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
தேசிய முன்னணி
வாய்ப்பு வழங்கினால் இத்தொகுதியில் போட்டியிட தயாராக இருக்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment