Tuesday 13 June 2017

பினாங்கு அரசு ஊழியர்களுக்கு போனஸ் - லிம் குவான் எங்



பினாங்கு-
நோன்புப் பெருநாளை முன்னிட்டு பினாங்கு அரசு ஊழியர்களுக்கு மாத வருவாயின் அடிப்படையில் முக்கால் பங்காக போனஸ்  வழங்கப்படும் என பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

37,41 அரசு ஊழியர்களுக்கு பிரத்யேக போனசும் வழங்கப்படும் என அறிவித்துள்ள அவர், இந்த போனஸ் பணம் ஜூன் 20இல் நோன்பு பெருநாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்கூட்டியாக வழங்கப்படும் என்றார்.

கடந்தாண்டு நோன்புப் பெருநாளுக்காக பினங்கு மாநில அரசு வெ. 6.9 மில்லியன் செலவிட்டதாக மேலும் கூறிய அவர் ,இவ்வாண்டு அத்தொகை வெ.7.5 மில்லியனாக கூட்டியுள்ளதாக கூறினார்.

பிரத்யேக போனஸ் நிதி நகராட்சி மன்றம்சட்டரீதியான அமைப்புகள் உட்பட தனியார் இஸ்லாம் பாலர் பள்ளிகள், தனியார் சீன பள்ளிகள், இஸ்லாம் கல்வி ஆசிரியர்கள்என தலா  வெ.200 முதல் வெ.300 வரை வழங்கப்படும் என்றார்.


இந்த தொகை வழங்குவதால் பெருநாளை கொண்டாடும் வறுமை சூழலில் இருப்பவர்களின்  சுமை குறையும் என  நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment