புத்ராஜெயா-
பிரதமர்
டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்தப்படி ஹீவூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கான
ஒப்பந்த கடிதம் ஒப்படைக்கப்பட்டது.
நாட்டில்
523 தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே இருந்த நிலையில் மஇகாவின் வேண்டுகோளுக்கிணங்க புதிதாக
7 தமிழ்ப்பள்ளிகள் நிர்மாணிக்கப்படும் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அறிவித்திருந்தார்.
சுங்கைப்பட்டாணி
தாமான் கெலாடி,
சுங்கை சிப்புட் ஈவூட், கிள்ளான் தாமான்ன் செந்தோசா,
பெட்டாலிங் ஜெயா பிஜேஎஸ்1, உலு லங்காட் பண்டார்
மக்கோத்தா செராஸ், ஜோகூர் பண்டார் மாசாய் பண்டார் ஶ்ரீ அலாம்
ஆகிய தமிழ்ப்பள்ளிகள் இதில் உள்ளடங்கும்.
524ஆவது தமிழ்ப்பள்ளியாக கெடா, தமிழவேள் கோ.சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி
செயல்பட்டு வருகிறது. 525ஆவது தமிழ்ப்பள்ளியாக ஹீவூட் தோட்டத்
தமிழ்ப்பள்ளி நிர்மாணிப்படவுள்ளது.
அவ்வகையில்
நேற்று இப்பள்ளிக்கான ஒப்பந்தக் கடிதத்தை மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் குத்தகையாளரிடம் வழங்கினார்.
ஈவூட் தமிழ்ப்பள்ளி
1 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
சுங்கை
சிப்புட் வட்டார மக்களின் கனவு தமிழ்ப்பள்ளியான இப்பள்ளி, இங்கு நகர்ப்புறத்தில்
மேற்கொள்ளப்படும் இரண்டாவது மிகப் பெரிய தமிழ்ப்பள்ளியாக உருவாகவிருக்கிறது என தமிழ்ப்பள்ளி
நடவடிக்கைக் குழுத் தலைவர் சொ.தியாகராஜன் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில்
செடிக் தலைமைச் செயல் அதிகாரி பேராசிரியர் டத்தோ டாக்டர் என்.எஸ்.இராஜேந்திரன், கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன்,
பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, பேராக் மாநில மந்திரி பெசாரின் ஆலோசகர் டத்தோ வ.இளங்கோ, சுங்கை சிப்புட் மஇகா தலைவர் மு.இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment