Tuesday 20 June 2017

நவீன் மரணம்: 4 பேர் மீது கொலை குற்றச்சாட்டு


ஜோர்ஜ்டவுன் -
18 வயது இளைஞர் தி.நவீனை பகடிவதை செய்து கடுமையாக தாக்கி மரணம் விளைத்த ஐந்து இளைஞர்களில் நால்வர் மீது கொலை குற்றச்சாட்டுசுமத்தப்பட்டது.

நவீனின் நண்பர் தி.பிரவீனை தாக்கியது தொடர்பில் இவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர் என தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் அனுவார் ஒமார் தெரிவித்தார்.

இந்த ஐவரில் ஒருவர்  அரசு தரப்பு சாட்சியாக அழைக்கப்படுவதாகவும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 118 இன் கீழ் போலீஸ் மசோதாவின் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தலையில் கடுமையாக தாக்கப்பட்டதன் விளைவாக சிகிச்சை பலனின்றி நவீன் கடந்த வியாழக்கிழமை மரணமடைந்தார்.

கடந்த 9ஆம் தேதி ஐந்து பேர் கொண்ட கும்பலால்  பகடிவதை செய்து சித்திரவதை செய்து, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மிக கொடுமையாக தாக்கப்பட்டார்.

இதனையடுத்து பினாங்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும் சிகிச்சை பலனளிக்காததால் மரணமடைந்தார்.

நவீனுடன் தாக்கப்பட்ட அவரது நண்பர் பிரவீன் வலுது கண்ணில் ஏற்பட்ட கடுமையான காயங்களின் விளைவாக கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment