Tuesday 27 June 2017

குண்டர் கும்பல் நடவடிக்கை ஈடுபட்டதாக நம்பப்படும் 33 பேர் கைது



ஈப்போ-
குண்டர் கும்பல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று நம்பப்படும் ஒரு பெண் உட்பட 33 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சுங்கை சிப்புட், தாமான் லிந்தாங் மக்மோரில் மேற்கொள்ளப்பட்ட 'ஓப்ஸ் சந்தாஸ்' நடவடிக்கையின்போது 22 வயது முதல் 55 வயது வரையிலான இந்த 33 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது நடவடிக்கையின்போது அந்த குன்டர் கும்பல் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர் என மாநில குற்றப்புலனாய்வு பிரிவுத் தலைவர் கான் தியான் கி தெரிவித்தார்.

இந்நடவடிக்கையின்போது இரண்டு கோழிகளையும் போலீசார் கைப்பற்றினர்.

ந்த 33 பேரில் 6 பேர் மீது ஏற்கெனவே குற்றப்பதிவுகள் உள்ளன எனவும் இது சங்கங்களின் சட்டம்  1996இன் 52 (3) பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது எனவும் அவர் சொன்னார்.

No comments:

Post a Comment