Wednesday, 21 June 2017

300,000 இந்தியர்கள் குடியுரிமையற்றவர்களா? ஜேபிஎன் மறுப்பு


கோலாலம்பூர்-
ந்நாட்டிலுள்ள 300,000 ந்தியர்கள் அடையாள ஆவணங்கள் இன்றி தவிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை தேசிய பதிவு இலாகா மறுத்துள்ளது.

அடையாள அட்டை, குடியுரிமை, பிறப்புப் பத்திரம் போன்ற ஆவணங்கள் இன்றி இந்தியர்கள் தவிக்கின்றன. இப்பிரச்சினையை  3 லட்சம் இந்தியர்கல் எதிர்நோக்கியுள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என தெரிவித்த ஜேபிஎன் தலைமை இயக்குனர் டத்தோ முகமட் யாஸிட், பதிவிலாகா மேற்கொண்டு வரும் பதிவு நடடிக்கையில் இது 1,813 பேர் மட்டுமே அடையாள ஆவணங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

பதிவு நடவடிக்கையில் பங்கேற்று அடையாள ஆவணங்களைப் பெறுவதற்கு பலர் முன்வருவதில்லை என்பதை கணக்கில் எடுத்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மை டஃப்தார் தொடங்கப்பட்டது. கடந்த ஜூன் 5ஆம் தேதி தொடங்கப்பட்ட மெகா மை டஃப்தார் மூலம் 19 இடங்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 1,13 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன.

விண்ணப்பதாரர்களின் பிரச்சினைகளுக்கு வெகு விரைவில் தீர்வு காண்பதற்கு ஏதுவாக அவர்கள் பிறந்த மருத்துவமனைகளில் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வர் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment